Thursday, September 6, 2012

காதலே கேட்பாயா ???



அன்று   

நீயும்

உன் காதலும் நிழலாய்

எனக்கே எனக்காய் 

உணராமலேயே  நான் 



                                                                                       

இன்று 

நானும் 

உன்னை உணர்ந்த என் காதலும் 

தன்னந்தனியாய் 

உணராமலேயே  சென்றுவிட்டாய்   நீ !!!







 

Monday, August 6, 2012

இந்த மண்ணோடு என் சொந்தம்


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 
என்று ஏட்டில் கூட விவசாய தொழிலுக்கு முன்னுரிமை.... ஆனால் இன்றைய விளை நிலங்கள் எல்லாம்  விலை நிலங்களாகி போன கொடுமை ?

பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளின் முக்கிய தொழில் வேளாண்மை. இங்கு பலபேரின் வாழ்வாதாரம் மண்ணை மட்டும் நம்பி. உழவு மற்றும் கால்நடை (பசு , ஆடு ) வளர்ப்பு தான் இங்குள்ள எல்லா கிராமங்களின் தலையாய தொழில். மின்சார  பற்றாக்குறை, விளை பொருள்களுக்கு நல்ல விலை இல்லாமை, விலைவாசி உயர்வு என எல்லா காரணங்களாலும் பாதிக்கும் மேல்பட்ட விவசாய நிலங்கள் இன்று சைட் பிரிக்கப்பட்டு வீடுகளாகி போன சோகத்தை எங்கு சொல்வது?

முன்னெல்லாம் கோவை டு பொள்ளாச்சி சாலையில் பயணிப்பதே சுகம்... எங்க பாத்தாலும் பசுமையா.... இந்த வழில போனாலே மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கும்.. இப்ப ஒவ்வொரு நிலத்தையும் சைட் போட்டு விற்பனைக்கு வெச்சுருக்கறத பாக்கறப்போ  அடிவயிறு கலங்குது. ஒரு விவசாய குடும்பத்துல பொறந்தா என்னோட சோகம் உங்களுக்கும் புரிய வாய்ப்பிருக்கு....இப்டியே போன எப்படி தான் விவசாயத்தை காப்பாத்த முடியும்? சத்தியமா வழி தெரில..

அவினாசி ரோடு கோவைல ரொம்ப பிரசித்தம்.. இன்னிக்கு அந்த ரோடுல ஒரு மரம் கூட இல்லை. எல்லாம் ஆறுவழி பாதைக்காக வெட்டிட்டாங்க.. எனக்கென்ன பயம்னா பொள்ளாச்சி ரோடு கூட அப்டி ஆகிருமொன்னு... 

எங்கப்பாவும் எங்களோட தோட்டத்தை வித்துட்டார்.. இப்ப அந்த இடமெல்லாம் வீடாகி... பாக்கறப்ப.  அந்த வலி ரொம்ப கொடுமை...
 நான் நேசித்த, என் மனசுக்கு மிக நெருக்கமான சொந்தம் எங்கள் தோட்டமும், செல்ல நாய்க்குட்டியும் தான்........

எல்லாத்தையும்  வித்துட்டு என்ன சாதிக்க போகிறோமென்று தெரியவில்லை.... இந்த மண் தரும் நிம்மதியை சந்தோஷத்தை எத்தனை  பணம் கொடுத்து வாங்க முடியும் தெரியவில்லை

இந்த வரிகளை படிக்கும் எத்தனை பேருக்கு நம்  மண்ணை நேசிக்கும் மாண்பு மிச்சம் இருக்கிறதென்று தெரியவில்லை ................






Thursday, July 19, 2012

பெரியபுராணம்

“வான் முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னர்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாதுயிர்கள் வாழ்க
வான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்”

 

 

                                    மன்னன் செங்கோல் முறைஅரசு செய்ய வேண்டும், நெறி தவறாது பக்கசார்பற்று எல்லா மக்களையும் சரிசமமாக ஆட்சி செய்ய வேண்டும். எந்தக்குறையும் இல்லாமல் மக்கள் வாழ வேண்டும். இதற்கு மாதம் மும்மாரி பொழிய வேண்டும். நான்கு மறை நால் வேதமும் கூறும் நெறிமுறை தவறாது ஒழுக வேண்டும். 

                        நற்தவம் தேவர்களுக்கான வேள்விகள் ஒழுங்கு தவறாது சரியன முறையில் செய்ய வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகெல்லாம் நிலவவேண்டும். நீதி தவராது எல்லோரும் ஒழுகுதல் வேண்டும். 

                    இப்படியான நிலை நாட்டில் இருந்தால் அமைதியும் சுபீட்சமும் மக்களின் வாழ்வும் உயர்வு பெற்று நாடும் உயர்ந்து உய்வு பெறும் என்பது தின்னம்

Monday, July 16, 2012

நான் ரசிக்கும் கானங்கள் 4

               தன்னை அறிதலே தெளிந்த அறிவு  என்றும் மெய்ஞானம் என்றும் நம் தமிழ் இலக்கியங்கள் கூறியதை இவ்ளோ எளிமை தமிழில்  என்னை போல் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எழுதியது தான்  கவிஞரின் வெற்றி.
எப்போ கேட்டாலும் எனக்கு பிடித்த வரிகள் "
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும்".. இந்த வரிகள் பாடும் போதெல்லாம் ராஜராஜ சோழன் படத்துல சிவாஜி சபையில் ஒரு மிடுக்கோடு நடந்து வரும் காட்சி என் மனத்திரையில் வந்து போகும்.. அது ஏன்னு  புரியலையே !!!!



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

(உன்னை)

பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

Thursday, July 12, 2012

நான் ரசிக்கும் கானங்கள் 3

எப்போ கேட்டாலும் நெகிழ  வைக்கும் பாடல்.  பத்மினியும் நதியாவும் பாட்டி  பேத்தியா வாழ்ந்திருப்பார்கள்.

Just addicted to this song


பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா ஆஆ .

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் ,

கண்களும்ம் ஓய்தது ஜீவனும்ம் தேய்ந்தது

ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்

இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

……

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

உன் முகம் பார்கிறேன் அதில் என் முகம் பார்கிறேன்


இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் ..

மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாட வேண்டும்


பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வாஆஆ

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


Wednesday, July 11, 2012

நான் ரசிக்கும் கானங்கள் 2

 கடவுள் வழிபாடு என்றாலே எனக்கு தெரிஞ்சதேல்லாம் "சாமி எனக்கு இது வேணும் அது வேணும் இது கஷ்டம் அது சங்கடம் இதெல்லாம் நீ  சரி பண்ணிடு " இப்டி தான் சாமி கும்பிட்டு பழக்கம்.


சாமி நி இருக்கறப்ப எனக்கு எந்த குறையுமே இல்லைன்னு கடவுள் கிட்டயே சொல்லற அழகு தான் இந்த பாட்டோட சிறப்பு. இந்த பாடல் கேட்ட பிறகு தான் நானும் என் பிரார்த்தனை முறைகளை  மாற்ற கற்றுக்கொண்டேன் .

M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல், கர்னாடிக் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமில்ல புரியாதவர்களையும் ஈர்த்தது இப்பாடலின் மற்றொரு தனி சிறப்பு. 


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா.... மலையப்பா....
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
 

பாடல் : C. ராஜகோபாலாச்சாரி 
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி

Monday, July 9, 2012

என்ன இல்லை எம் தமிழில்?

                                                    

                                        நாலடியார் கூறும் கல்வி 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

விளக்கம் :-

குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல;

நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.


குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு"1 எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.

நன்றி : http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm

Monday, May 21, 2012

நட்பு நட்பு

                            நம்ம வாழ்க்கைல கடந்துபோற எல்லாரும் நம்மள இம்ப்ரெஸ் பண்றது இல்லை. 'அட' அப்டின்னு அசின் போனா மட்டும் திரும்பி பாக்கற மக்களுக்கு I am sorry  இந்த பதிவு பொருந்தாது. 

நான்  எல்லாரையும் கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிக்கறேன்னு நானே என்னை பத்தி பெருமையா நெனைச்சு பாத்துகிட்டு இருந்த என் நெனைப்புல மண்ணு கல்லு எல்லாத்தயும் போட்ட ஒரு மனுஷன்.  

   நமக்கே தெரியாம அல்லது தெரிஞ்சு பண்ற தப்புகளை அடுத்தவங்க சொன்னா புடிக்காது. ஏன் நண்பர்கள் சொன்னாலே கோவம் வரும். என் தப்புகளை சுட்டி காட்டியே ஆன நண்பர் இவர். சொல்ல போனா கூட பிறக்காத உடன்பிறப்பு. 

                   தப்பை சுட்டி காட்டவே ஒரு தைரியம் வேணும்... அது இவர் கிட்ட ரொம்ப ஜாஸ்தி. ரொம்ப கோவம் + ரொம்ப திமிர் கொழுப்பு... இப்டி தான் முதல் பாக்கறப்ப பேசினப்ப தோணிச்சு... அதுக்கப்புறம் சண்டை ஈகோ இப்டி தான் இவர் அறிமுகம். 
  
    சிலர் என்ன திட்டினாலும் நம்ம நல்லதுக்குனு தோணும் பட் ஒரு சிலரின் முக குறிப்புகளே நமக்கு கடுப்பாகும். இவர் இதுல முதல் பிளேஸ். நம்ம லைப் ல ஒரு சிலரை மட்டும் தான் ரோல் மாடல் மாதிரி  யோசிக்க தோணும். என்னோட தவறுகளை ரொம்ப அழகா சுட்டி காட்டி.. சொள்ளபோனா சில சமயம் செருப்பால அடிச்சா மாதிரி காட்ட தெரிந்த ஒரு  நல்ல மனிதர். கொஞ்சம் நிறைய straight forward... கொஞ்சம் innocent. 

நீங்க பண்ணின பெஸ்ட் அட்வைஸ்... இப்பவும் நா நியாபகத்துல  வெச்சுருக்கேன். "உன்னால எந்த விஷயத்த யார்கிட்டயும் வெளிப்படையா சொல்ல முடியாதோ
அந்த விஷயத்த செய்யாதே - அப்படி சொல்ல முடியாத விஷயங்கள்  அநேகமா  தப்பான விஷயங்களாக தான் இருக்கும் ". இப்பவும் நா பெரிய விஷயங்களை முடிவு செய்யறப்ப I always consider this Advise.
உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அடுத்த பெரிய பாடம் "Self discipline". 

Plus point a சொன்னா எப்புடி. உங்களுக்கும் மைனஸ் Points இருக்குங்க பாஸ்.
உங்களோட பெரிய மைனஸ் பாயிண்ட் அப்டின்னு நா நெனைக்கறது  "கொஞ்சம் think in other's point of view" and "Try to use polite words while expressing your point of views to others "

உங்கள பத்தி எழுதறதுக்கு நெறையா இருக்கறதுனால, பார்ட் 2 ல இன்னும் சொல்லறேன்.
தேங்க்ஸ் பார் being my Brother, Philosopher and a Nice friend. Good Luck Durai.



Just a simple thought!!!

What life taught me is to "wait" and "Be patient".

But At times I missed still I am human...
I don want to escape with the words " still I am human" but I'm in a process of transformation...

To me, Age is also a main factor for the thought  transformation...
The maturity level and the perceptions which I've now will be changed in future.. My comments and point of views will be turned or it may be entirely opposite..

May be my conclusion towards this is "People and their perceptions always change"

change alone is permanent, so try to accept changes .. I am just trying to do so....

நான் ரசிக்கும் கானங்கள் 1


இப்படி ஒரு படலை யாருக்காவது பிடிக்காமல் போகுமா ? அப்படி ஒரு சாங்.    சான்சே  இல்லை.
  I love this song... What a song in what a situation !!!!!!!!!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது 
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ 
மதம் என்னும் மதம் ஓயட்டும் 
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் 


வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே 
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே 
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும் -மலரோடு மலர் இங்கு...



துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும் 
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்

Thursday, March 29, 2012

P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை





        இந்த தலைப்பு  P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை   யாருக்கும் புரிய வாய்ப்பு இல்லை உமாவையும் என்னையும்  தவிர.


    நம்மாளால் எல்ல நேரமும் நல்லவர்களாக இருக்க முடியாது. பட் நம்முடைய நட்பிடம் மட்டும்  நாம் நாமாக அடையாள படுத்தி கொள்ளலாம். சந்தோஷ் சுப்பிரமணியம் படம் எனக்கு ரொம்ப புடிச்சதுக்கு முக்கிய காரணம் "no one is same in character as they are at home/parents".  எல்லா பிரச்சனைகளையும் வீட்ல சொல்ல முடியாது. பட் நண்பர்கள் எப்பவும் நமக்காக யோசிப்பவர்கள். நம்ம பண்ண தப்புகள் அனைத்தையும் சுட்டிகாட்டி நம்மை நல்வழி படுத்தும்  இதயங்கள். இப்படி பட்ட நண்பர்களை எப்பவும் மிஸ் பண்ண கூடாது.

உமா மகேஸ்வரி சுருக்கமாக எனக்கு மட்டும் உமா.    
     உமாவும் நானும்  ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தோம். 16 வருஷ நட்பு. யார் சொன்னார்கள் பெண்களால் ரொம்ப வருஷம் நட்பு பாரட்ட முடியாதென்று. இன்றும் என் பல பிரச்சனைகளுக்கு இவள் தான் கைடு....... Very strong Girl and good decision maker. என்னோட  காலேஜ் கிளாஸ் கட், என்ஜாய்மென்ட், கஷ்டம் , சந்தோஷம் எல்லாமும் இவளோடு தான். ஐ மிஸ் யு உமா.

          உனக்கு தெரியுமா உன்னை பத்தி நா எழுதறது ?..... தெரிஞ்ச அடி பிச்சுடுவ. பட் ஐ லவ் டு டெல் அபௌட் யு மை டியர்.

ஆறாம் வகுப்புல இருந்து நா தான் கிளாஸ் லீடர் (கொஞ்சம் என்னோட விளம்பரம் -  மிஸ் எல்லார்க்கும் நா ரொம்ப பெட்) உமாவ எனக்கு அப்ப புடிக்கவே புடிக்காது... அவ எப்பப் பாத்தாலும் அரட்டை அடிச்சுக்கிட்டே இருப்பா. மிஸ் இல்லாத டைம் ல நா தான் கிளாஸ் அமைதிக்கு பொறுப்பு. பட் இவளால நா திரும்ப திரும்ப கிளாஸ் கத்திகிட்டே இருக்கு லீடர் என்ன பண்றன்னு திட்டு வாங்குவேன். என்கிட்டே நா எப்படி மெரட்டினாலும் பயப்பட்டு தொலைக்கவே மாட்டா... பேசியவர்கள் அப்டின்னு போர்டுல தலைப்பு எழுதி கீழ  P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை , P.Umamaheswari Over Over 2  Over 3   Over 31அப்டின்னு எழுதி மிஸ் கிட்ட இவள அடி வாங்க வெப்பேன். அதென்ன ஓவர்ன்னு இப்ப ஒரு கேள்வி வரணுமே ?
 ஒரு டைம் பேசினா over. மறுபடி பேசினா Over 1  இப்டியே Over 51 
 வரைக்கும் போகறது உமா வோட தனி சாமர்த்தியம்.

         பட் ஸ்கூல் முடிச்சு ஒரே காலேஜ் .. ஒரே பஸ்... ரொம்ப புரிஞ்சுகிட்டோம். காலேஜ் வந்து தான் நாங்க திக் பிரென்ஸ்...இப்ப ரொம்ப ரொம்ப திக்... அதுக்காக சண்டை போடாம இருக்க முடியுமா? அடிக்கடி சண்டை வரும். நா உன்னை அசிங்கமா திட்டறதும் நீ என்னை அதைவிட அசிங்கமா திட்டறதும் சகஜமப்பா.

           இதெல்லாமும் தாண்டி இன்று ஆல(ழ)மரமாய் தழைத்திருக்கிறது நாம் விதைத்த நட்பு விதை.

இப்ப வரைக்கும் எப்பவும்  நான்  ரசிக்கும் மிக அழகான ஆழமான  நட்பு ....... உமா ..

She is different.. she is cute.... I like your behavior and mannerisms.... I will remember ours days ever... all are beautiful days we make it together........  I like the most important thing is "your point of views about life"..... I hate the main one which is your adamant behavior.. I like that at times :-).. 


I like my friend so much just because she is my friend..
Just because she remains same in all pace of life
she took me the way what I am
she is the same from day one when we felt we were close
she tell my positives to others and
negatives only to me
she never failed to stop when I am wrong!

 - To -
என்னுடைய உமாவுக்கு !!!!!



       




Wednesday, February 29, 2012

எழுத மறந்த டைரிகள்


என் டைரியில் எழுத மறந்த அனுபவங்கள் எல்லாம் சேந்து கொண்டே போகின்றன...... சில மறக்கமுடியதவற்றை பதிவு செய்தல் கூட ஒரு அழகான அனுபவம் தான்.


         இந்த டைட்டில்ல வர எல்லா பதிவுகளும் நான் வாங்கின மொக்கைகளும் பன் ங்களும்.... கொடுத்த மொக்கைகளும் பன்  களும் மறக்க முடியாத அனுபவங்களும் கற்றுக்கொண்ட கொடுத்த பாடங்களுமாக எழுத போகிறேன்.
மொத்ததுல சுயபுராணம்

பின்னாடி என்னோட வரலாறை எழுத போற பல ஆயிரகணக்கான பேனாக்களுக்கு இந்த ப்ளாக் ஒரு உதவியா இருக்கனும் அப்டிங்கற ஒரு நல்ல என்னத்துல மட்டுமே இந்த முயற்சி  

29 Feb 2012

Leap year - To me Feb month is always special... 


சம்பளம் சீக்கரம் வந்துரும். 4 வருஷத்துல ஒரு டைம் 29. ஸோ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் (சம்பளம் ஒரு நாள் கழிச்சு வந்தாலும் :-))


        அழகான லீப் இயர். எதாச்சும் மறக்க முடியாத மாதிரி பண்ணனும்னு நெனச்சேன். பட் எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை. என் அக்கா வளைகாப்புக்கு பெரிய மனுஷி மாதிரி வளையல் வாங்கினேன். கூட பிறந்தவளுக்கு செய்யற சந்தோசம் மாதிரி வருமா ? ஸோ சூப்பர். 


         என் அக்காக்கு நான் ரொம்ப பெரிய அறிவுன்னு நெனைப்பு. பட் நா அப்டி பட்ட அப்பாடக்கர் இல்லைன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்ல. இந்த ப்ளாக் கிட்ட தட்ட என்னோட கிறுக்கல்களினால் மட்டுமே நெறைஞ்சு போயிடுமோ? இல்ல இல்ல, இந்த கிறுக்கல்களுக்கும் நான் மட்டுமே சொந்தக்காரி :-)


அடுத்த லீப் இயர் ல மீட் பண்ணலாம் !!!!! 

Wednesday, February 22, 2012

DREAMS ------- STILL MAKE IT


                      The way of life is not always chosen by us.. It depends on how we have made our choices.. All the decisions or choices are not wrong but a few.. if one wrong decision make all of the moves worst.It could spoil all the good decisions.. 


               Life taught me...no..no it is teaching me lots of lessons.. Identify the faults of our self is the most biggest discovery in life according to me....... 


          I started to identify where I am wrong what is exactly me  and all around us. The most important thing is still we are living.... so still we can make our dreams happen... 


          Lets find out the way where the real happiness if not make our self happy with what we have.


        

Tuesday, February 7, 2012

2012

இன்னும் ஓர் இரவு
இன்னும் ஓர் நிலவு
இன்னும் ஓர் நினைவு


இன்னும் ஓர் வருஷம்

கொஞ்சம் லேட் பதிவு. லேட்ன்னா  ஒரு மாதம் லேட். :-)
 சரி விஷயத்துக்கு வருவோம். புது வருடம்... புது கனவுகள்... என்று புதியதாக தொடங்குவோம்.
 
2012 -ஐ வாழ்த்தி வரவேற்போமே!!!