போன ஞாயிற்றுகிழமை எனது பர்சை பேருந்தில் தொலைத்தேன். பைசா என்னமோ சொற்பம் தான். ஆனால் தொலைத்த போது தான் தெரிந்தது தேடி தொலைவதின் வருத்தம். வங்கி ATM கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் நான் வழக்கமாக பர்சில் வைதிருப்பேன்.. நோ மேக்கப் சாதனங்கள்....
அட நம்புங்க.
அட நம்புங்க.
என்ன பண்ண என்று மனசை ஒரு வழியா தேற்றிக்கொண்டு வங்கி கார்டை வாடிக்கையாளர் சேவை மையத்தின் உதவியுடன் பிளாக் செய்தேன்.
இப்ப நீங்க நெனைக்கலாம் அப்பாடி எப்படியோ பணம் தொலைந்ததோடு போயிற்று. கார்டை பிளாக் பண்ணியாச்சு,இனிமே யாரும் அதுல இருந்து பணம் ஸ்வைப் பண்ண முடியாதுன்னு. அதுதான் இல்லை. என் கார்டுல இருந்த பணமே 99 ரூபா தான். இதுல எங்க ஸ்வைப் பண்ணி பணம் எடுத்துட்டாலும்!!! வெளங்கிடும்...
இங்க வெச்சோம்ல நம்ம ட்விஸ்ட்ட.
இங்க வெச்சோம்ல நம்ம ட்விஸ்ட்ட.
செரி செரி...... பர்ஸ்ல எவ்ளோ பணம் வெச்சுருந்த அப்டின்னு நீங்க
கேக்கறது புரியுது. முழுசா 200 ரூபா வெச்சுருந்தேன். மாச கடைசி பாஸ்...
200 ரூபா பாத்து செலவு பண்ணுன்னு அப்பா கிட்ட அடிச்சு புடிச்சு வாங்கின பணம். ஸோ வீட்ல சொல்லல. சொல்ல முடியல. திட்டு யாரு வாங்கறது?
அப்படி இருந்தும் அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டேன் நேர்மை பாஸ் நேர்மை.
ஏதோ சோதனை காலம். போனது போகட்டும்னு விட்டுட்டேன். திடீர்னு இன்னிக்கு காலைல ஒரு போன் அப்பா கிட்ட இருந்து. மனுஷன் கேக்கறார் பர்ஸ தொலைச்சியான்னு. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி..... ஆமான்னு ஒத்துகிட்டோம்ல..... வேற வழி......
செரி செரி விஷயத்துக்கு வரேன்....
பர்சை எடுத்த அந்த நேர்மை மனிதர் என் போன் நம்பர் இல்லாததால் ஓட்டுனர் உரிமத்தில் உள்ள முகவரிக்கு கடிதம் அனுப்பி அவரது முகவரிக்கு வந்து பொருள்களை வாங்கி செல்ல சொல்லி
..... எத்தனை பேருக்கு வரும் இந்த மனது. அந்த நல்ல உள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி கோடி........
..... எத்தனை பேருக்கு வரும் இந்த மனது. அந்த நல்ல உள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி கோடி........
யாரோ என்னமோ தொலைத்தால் நமக்கென்ன என்று இல்லாமல் தொலைத்தவன் மன நிலையில் இருந்து பார்த்தால்தான் வருத்தம் புரியும்.
நீங்களும் நானும் சிந்திக்கலாமே மனிதநேயத்துடன் !!!!
4 comments:
நல்ல உள்ளம்தான்.. ஆனால் அதற்காகவே அலட்சியமாக இருத்தல் கூடாது.. நமது பொருட்களை நாம்தான் கவனத்தோடு பாது காக்க வேண்டும்... எப்போதும் உதவும் கரங்களை எதிர் பார்க்க கூடாது..
நல்ல மனம் வாழ்க...
இப்படித்தான் நானும் செல் போனை தொலைத்தேன் ..எடுத்தவர் கொடுக்கவில்லை..
உங்கள் வலைப்பூவுக்கு வந்ததில் நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் இருந்த அண்ணமலையான் அவர்களை பார்க்க முடிந்தது...
Unga Cell romba costlya erunthirukkalam :-)))
அவ்வளவு காஸ்ட் இல்லை ..சாம்சங் டபிள் சிம் .. எடுத்தவர் மெனக்கெட்டு தேடி கொடுக்க மனமில்லாமல் இருக்கலாம் .. விட்டாச்சு
Post a Comment