Thursday, March 29, 2012

P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை





        இந்த தலைப்பு  P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை   யாருக்கும் புரிய வாய்ப்பு இல்லை உமாவையும் என்னையும்  தவிர.


    நம்மாளால் எல்ல நேரமும் நல்லவர்களாக இருக்க முடியாது. பட் நம்முடைய நட்பிடம் மட்டும்  நாம் நாமாக அடையாள படுத்தி கொள்ளலாம். சந்தோஷ் சுப்பிரமணியம் படம் எனக்கு ரொம்ப புடிச்சதுக்கு முக்கிய காரணம் "no one is same in character as they are at home/parents".  எல்லா பிரச்சனைகளையும் வீட்ல சொல்ல முடியாது. பட் நண்பர்கள் எப்பவும் நமக்காக யோசிப்பவர்கள். நம்ம பண்ண தப்புகள் அனைத்தையும் சுட்டிகாட்டி நம்மை நல்வழி படுத்தும்  இதயங்கள். இப்படி பட்ட நண்பர்களை எப்பவும் மிஸ் பண்ண கூடாது.

உமா மகேஸ்வரி சுருக்கமாக எனக்கு மட்டும் உமா.    
     உமாவும் நானும்  ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தோம். 16 வருஷ நட்பு. யார் சொன்னார்கள் பெண்களால் ரொம்ப வருஷம் நட்பு பாரட்ட முடியாதென்று. இன்றும் என் பல பிரச்சனைகளுக்கு இவள் தான் கைடு....... Very strong Girl and good decision maker. என்னோட  காலேஜ் கிளாஸ் கட், என்ஜாய்மென்ட், கஷ்டம் , சந்தோஷம் எல்லாமும் இவளோடு தான். ஐ மிஸ் யு உமா.

          உனக்கு தெரியுமா உன்னை பத்தி நா எழுதறது ?..... தெரிஞ்ச அடி பிச்சுடுவ. பட் ஐ லவ் டு டெல் அபௌட் யு மை டியர்.

ஆறாம் வகுப்புல இருந்து நா தான் கிளாஸ் லீடர் (கொஞ்சம் என்னோட விளம்பரம் -  மிஸ் எல்லார்க்கும் நா ரொம்ப பெட்) உமாவ எனக்கு அப்ப புடிக்கவே புடிக்காது... அவ எப்பப் பாத்தாலும் அரட்டை அடிச்சுக்கிட்டே இருப்பா. மிஸ் இல்லாத டைம் ல நா தான் கிளாஸ் அமைதிக்கு பொறுப்பு. பட் இவளால நா திரும்ப திரும்ப கிளாஸ் கத்திகிட்டே இருக்கு லீடர் என்ன பண்றன்னு திட்டு வாங்குவேன். என்கிட்டே நா எப்படி மெரட்டினாலும் பயப்பட்டு தொலைக்கவே மாட்டா... பேசியவர்கள் அப்டின்னு போர்டுல தலைப்பு எழுதி கீழ  P.உமா மகேஸ்வரி மிக மிக அடங்கவில்லை , P.Umamaheswari Over Over 2  Over 3   Over 31அப்டின்னு எழுதி மிஸ் கிட்ட இவள அடி வாங்க வெப்பேன். அதென்ன ஓவர்ன்னு இப்ப ஒரு கேள்வி வரணுமே ?
 ஒரு டைம் பேசினா over. மறுபடி பேசினா Over 1  இப்டியே Over 51 
 வரைக்கும் போகறது உமா வோட தனி சாமர்த்தியம்.

         பட் ஸ்கூல் முடிச்சு ஒரே காலேஜ் .. ஒரே பஸ்... ரொம்ப புரிஞ்சுகிட்டோம். காலேஜ் வந்து தான் நாங்க திக் பிரென்ஸ்...இப்ப ரொம்ப ரொம்ப திக்... அதுக்காக சண்டை போடாம இருக்க முடியுமா? அடிக்கடி சண்டை வரும். நா உன்னை அசிங்கமா திட்டறதும் நீ என்னை அதைவிட அசிங்கமா திட்டறதும் சகஜமப்பா.

           இதெல்லாமும் தாண்டி இன்று ஆல(ழ)மரமாய் தழைத்திருக்கிறது நாம் விதைத்த நட்பு விதை.

இப்ப வரைக்கும் எப்பவும்  நான்  ரசிக்கும் மிக அழகான ஆழமான  நட்பு ....... உமா ..

She is different.. she is cute.... I like your behavior and mannerisms.... I will remember ours days ever... all are beautiful days we make it together........  I like the most important thing is "your point of views about life"..... I hate the main one which is your adamant behavior.. I like that at times :-).. 


I like my friend so much just because she is my friend..
Just because she remains same in all pace of life
she took me the way what I am
she is the same from day one when we felt we were close
she tell my positives to others and
negatives only to me
she never failed to stop when I am wrong!

 - To -
என்னுடைய உமாவுக்கு !!!!!