என்று ஏட்டில் கூட விவசாய தொழிலுக்கு முன்னுரிமை.... ஆனால் இன்றைய விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி போன கொடுமை ?உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளின் முக்கிய தொழில் வேளாண்மை. இங்கு பலபேரின் வாழ்வாதாரம் மண்ணை மட்டும் நம்பி. உழவு மற்றும் கால்நடை (பசு , ஆடு ) வளர்ப்பு தான் இங்குள்ள எல்லா கிராமங்களின் தலையாய தொழில். மின்சார பற்றாக்குறை, விளை பொருள்களுக்கு நல்ல விலை இல்லாமை, விலைவாசி உயர்வு என எல்லா காரணங்களாலும் பாதிக்கும் மேல்பட்ட விவசாய நிலங்கள் இன்று சைட் பிரிக்கப்பட்டு வீடுகளாகி போன சோகத்தை எங்கு சொல்வது?
முன்னெல்லாம் கோவை டு பொள்ளாச்சி சாலையில் பயணிப்பதே சுகம்... எங்க பாத்தாலும் பசுமையா.... இந்த வழில போனாலே மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கும்.. இப்ப ஒவ்வொரு நிலத்தையும் சைட் போட்டு விற்பனைக்கு வெச்சுருக்கறத பாக்கறப்போ அடிவயிறு கலங்குது. ஒரு விவசாய குடும்பத்துல பொறந்தா என்னோட சோகம் உங்களுக்கும் புரிய வாய்ப்பிருக்கு....இப்டியே போன எப்படி தான் விவசாயத்தை காப்பாத்த முடியும்? சத்தியமா வழி தெரில..
அவினாசி ரோடு கோவைல ரொம்ப பிரசித்தம்.. இன்னிக்கு அந்த ரோடுல ஒரு மரம் கூட இல்லை. எல்லாம் ஆறுவழி பாதைக்காக வெட்டிட்டாங்க.. எனக்கென்ன பயம்னா பொள்ளாச்சி ரோடு கூட அப்டி ஆகிருமொன்னு...
எங்கப்பாவும் எங்களோட தோட்டத்தை வித்துட்டார்.. இப்ப அந்த இடமெல்லாம் வீடாகி... பாக்கறப்ப. அந்த வலி ரொம்ப கொடுமை...
நான் நேசித்த, என் மனசுக்கு மிக நெருக்கமான சொந்தம் எங்கள் தோட்டமும், செல்ல நாய்க்குட்டியும் தான்........
எல்லாத்தையும் வித்துட்டு என்ன சாதிக்க போகிறோமென்று தெரியவில்லை.... இந்த மண் தரும் நிம்மதியை சந்தோஷத்தை எத்தனை பணம் கொடுத்து வாங்க முடியும் தெரியவில்லை
இந்த வரிகளை படிக்கும் எத்தனை பேருக்கு நம் மண்ணை நேசிக்கும் மாண்பு மிச்சம் இருக்கிறதென்று தெரியவில்லை ................