Thursday, August 21, 2014

ராமன் எத்தனை ராமனடி

i sing this song in my heart whenever i am missing my mom.... loved this song very much just because my amma ... she always sing this to me..... love you ma... coming to meet you :-))

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

Wednesday, June 4, 2014

படித்ததில் பிடித்தது

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று....

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

படித்ததில் பிடித்தது

--------------------"இதுதான் நம் தேசம்"----------------------------

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.......

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக
ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்..

தேசம்....

Tuesday, May 27, 2014

மத்தாளம் மத்தாளம் கொட்டி முழங்க

ரொம்ப பெரிய எதிர்பார்ப்புகளுக்கு அப்புறம் கடைசியா கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு..... நான் எதிர்பார்த்த காதல் எதிர்பர்க்காத மனிதர் என்று கலவையான மனநிலையில் .............அழகாய் நடந்தது திருமணம்.... 

துரை... தர்ஷு....விஜி .....ஷோபி சார்லஸ் .... யாரையும் மறக்க முடியாது.. யு ஆர் ஆல் ஸோ சப்போர்ட்டிவ் ... நன்றி அப்டின்னு சின்னதா ஒரு வார்த்தை சொல்லி முடியாது... மனசெல்லாம் நேசத்தோடு ஒரு துளி கண்ணீர் சொல்லும் என் வார்த்தை தேடலை!!!

வாழ்க்கை எனக்கு கேட்டதெல்லாம் குடுக்கல.... பட் எனக்கு தேவைபட்டது கெடைச்சதுன்னு எனக்கு திருப்தி. எவ்ளோ பேர்க்கு அந்த திருப்தி இருக்கும்னு தெரில....
But I want this Gratitude ever.

I can remember very well about the mindset what i had towards this event. so many struggles and hurdles and finally just hold the hand for ever.."ever for ever"... I don't disturb God too much for my wishes however will go him only for few wishes...  I just THANK GOD for showing a nice heart who can keep me in Peace and Happiness.

Honestly Thanks for being in ma Life Santhosh. Thanks so much for the Love.

Normally many experienced people will say "if you want marriage life to be Happy.. just stop expectation"
But I have only one expectation .. I want this peace ever.. even i don't want happiness but "Peace of Living
I just wanted to be what I am after my marriage as well".


Wednesday, April 16, 2014

யார் இந்த சாலை ஓரம்

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டுக்கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது
அது பரந்தொடுது வானிலே  
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோண்டும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே