Monday, June 6, 2011

Karthik calling Karthik


Recently I have seen this movie Karthik calling Karthik.

 Anyways It is not a new movie that released on 2010. But

I got chance to watch now only...guess Not too late :-)))))


     First few scenes I got bored and then after a 15 minutes the real enthu starts.
The way Farhan acts gave life to movie... Actually he

suits for the character.. Deepika was not up to

expectations, may be for glamour part she did well....
In one word, Interesting movie and we might see once.


But the lines below... no one can forget... awesome lines..


First half is good and the second half of the movie is too

long.... but this should be required to explain how it

works...

If you get time, see once... Feel good type of movie


but Hey ya lyrics chanceless.........



Hey ya, hey ya, hey ya

I see you walking through the door

Hey ya, why won't you look across the floor

Hey ya, I got to tell you how I feel

Hey ya, oh baby you are the only one for me

Hey ya, I wanna get closer to you

Hey you, I need to be closer to you

Hey ya, I got to tell you how I feel

Hey ya, oh baby you are the only one for me

Hey ya, hey ya

Oh baby, hey ya, Oh baby, hey ya, you are the

only one for me, hey ya

In first half, how Farhan, here his character name Karthik. so How Karthik changed his
way life like dressing and his style, the one especially he behaved in office sounds too
good. The way he attracts Shonali (Deepika)his co-staff also really enjoyable.


This movie portrays the real corporate culture and definitely a best example for "say no to certain things"...

You will enjoy!!!!!!!!!!!!!!!!!!

Thursday, June 2, 2011

திஸ் இஸ் கார்பரேட் லைப்

 கார்பரேட் லைப் ன்னு டைட்டில் பாத்ததும் என்னமோ பயங்கர 
ஸ்டைலான  லைப் பத்தி சொல்ல போறேன்னு நெனைச்சா அது உங்க தப்பு. உங்களுக்கான தலைப்பு இது இல்லை. சரி சரி வந்தது வந்தாச்சு. படிச்சு தான் பாருங்களேன்.

        சொல்லப்போனா இந்த கட்டுரை என் சுய அனுபவங்களும் அதன் பாடங்களும்னு கூட சொல்லலாம். எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. ஹி ஹி.

 விஷயத்துக்கு வரேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு டைப் பேச்சு தான். கார்பரேட் லைப்க்கு வந்தப்புறம் தான் மனசுல நெனைக்கறது எல்லாம் பேச கூடாது. வேண்டாம்னு சொல்லறத கூட பாலிஷா சொல்லனும்னு கத்துக்கிட்டேன்.

எதிர்ல இருக்கறவன் மனசு வார்த்தையால புண்படாம சொல்ல வந்த கெட்ட செய்திய சொல்லணும். அப்டி இருக்கறவனுக்கு பேர் தான் ப்ரோபஸனல். நம்ம பாஷைல சொல்லனும்னா பொழைக்க தெரிஞ்சவன்.

            3  வருஷம் பழகின நட்பு துரோகம் செய்தபோது விழுந்தது தான் என் வாழ்கையின் முதல் அடி. அதற்க்கு அப்புறம் விழுந்த ஒவ்வொரு அடிகளும் என்னை வலுவாக்கின. நீயும் திருப்பி அடிக்கவில்லை என்றால் வாழ முடியாது என்பதை நானே உணர்ந்து கொண்டேன்.
கார்பரேட் லைப் கற்று கொடுத்த பாடம் தான்........

         நட்பு கொடுக்கும் என்று தான் எனக்கு தெரிந்திருந்தது. சில நட்புகள் நம்மை கெடுக்கவும் செய்யும் என்பது 2 வருஷம் முன்னாடி தெரிஞ்சுகிட்டேன். எல்லாம் கார்பரேட் லைப்!!!!!!

விலை கொடுத்து தான் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும். சில திருப்பி தர இயலா விலைகள். அனுபவிச்சா மட்டும் தான் சில வலியும் வேதனைகளும் புரியும். 


மனுஷனா இருக்கற  ஒவ்வொருத்தருக்கும் நம்பிக்கை துரோகம் தான் வாழ்க்கைல மன்னிக்க முடியாதது. எனக்கும் நம்பினவர்கள் கொடுத்தது நம்பிக்கை துரோகம் தான். இதெல்லாம் கார்பரேட் லைப்ல சகஜம்.  

கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாம பேசறது மட்டுமில்ல.. எனக்கு வலிக்கவே இல்லைன்னு சிரிச்சுக்கிட்டே இருக்கனும் ஆனா கீழ விளுந்தத பத்தி  சொல்லவே கூடாது. நாங்கல்லாம் எத்தனை அடிச்சாலும் தாங்குவோம் ரொம்ப நல்லவங்கன்னு நம்ம எதிராளிக்கு புரிய வெக்கணும்.

இதுல ஹைலைட் என்னன்னா அவன் நம்ம எதிரின்னு  எந்த சந்தர்ப்ப சூழ்நிலைலயும் காட்டிக்கவே கூடாது. அப்டி காட்டிக்கிட்ட அப்பவே நீங்க ஆட்டத்துல அவ்ட். இந்த ஆணி எல்லாம் என்னால புடுங்க  முடியாதுன்னு போயிடலாம்னு நெனச்சேன்.  ஆனா மனசுல ஒரு   வைராக்கியம்.... உனக்கு நான் எந்த வகையிலையும் கொறைஞ்சு போகலை. யாரு என்கூட இல்லாட்டியும் தனியாவே இருக்க முடியும்னு நின்னேன்.  தனியாவே இருந்துப்பேன்ன்னு நின்னு காமிச்சேன்.
நின்னது போதும் கால் வலிக்கும் உக்காருன்னு சொல்றது புரியுது பாஸ்.

எவன் எப்டின்னு ஜட்ஜ் பண்ணகத்துக்கணும். முக்கியமா 
கூட்டத்தில் இருக்கும்போதும் தனியா இருக்கும்போதும் மூஞ்சிய
சிரிச்ச மாதிரியே  வெச்சுக்கணும். வீட்ல பொண்டாட்டி கிட்ட  கேவலமா திட்டு வாங்கிட்டு வந்தாலும் செரி. ட்ராபிக் போலிஸ்ல  பைன் கட்டிட்டு வந்தாலும் சரி. சிரிப்பு மட்டும் அப்டியே இருக்கணும்..
  
செரி.....................   இதனால  நா  சொல்ல வர கருத்து என்னன்னா
நம்மள பத்தி கெட்டது சொல்றவன் எல்லாம் கெட்டவனும் இல்ல. நம்ம கூடவே இருக்கறவன் எல்லாம் நல்லவனும் இல்ல. சூதானமா இருந்து பொழைச்சுக்க அப்பு..............எப்படியெல்லாம் வாழற மக்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சு இந்த உலகத்துல பொழைக்க கத்துக்கணும் அப்பு. 


இப்படியெல்லாம் உங்களுக்கு இருக்க தெரியுமா?
வெல்கம் டு கார்பரேட் லைப். திஸ் இஸ் பார் யு அண்ட் யு ஒன்லி.

அறிவுரை வாழ்க்கைக்கு............

என் ப்ளாக் நண்பர் அனுப்பிய யோசனைகளை நீங்களும் படித்து பாருங்களேன். ரொம்ப நல்லாருக்குங்க அண்ணாமலையான் சார்


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,

செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்  தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது
வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான
முடிவுக்கு வரும் ஒரு கலை

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்

17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம்
முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும்
சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல்
இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

Wednesday, June 1, 2011

ஒரு மனிதர்...............மனிதநேயத்துடன்

போன ஞாயிற்றுகிழமை எனது பர்சை பேருந்தில் தொலைத்தேன். பைசா என்னமோ சொற்பம் தான். ஆனால் தொலைத்த போது தான் தெரிந்தது தேடி தொலைவதின் வருத்தம். வங்கி ATM கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் நான் வழக்கமாக பர்சில் வைதிருப்பேன்.. நோ மேக்கப் சாதனங்கள்.... 
அட   நம்புங்க. 

என்ன பண்ண என்று மனசை ஒரு   வழியா  தேற்றிக்கொண்டு  வங்கி  கார்டை வாடிக்கையாளர் சேவை மையத்தின் உதவியுடன் பிளாக் செய்தேன்.

இப்ப நீங்க நெனைக்கலாம் அப்பாடி எப்படியோ பணம் தொலைந்ததோடு போயிற்று. கார்டை பிளாக் பண்ணியாச்சு,இனிமே யாரும் அதுல இருந்து பணம் ஸ்வைப் பண்ண முடியாதுன்னு. அதுதான் இல்லை. என் கார்டுல  இருந்த பணமே 99 ரூபா தான். இதுல எங்க ஸ்வைப் பண்ணி பணம் எடுத்துட்டாலும்!!! வெளங்கிடும்...
இங்க வெச்சோம்ல நம்ம  ட்விஸ்ட்ட.


செரி செரி......  பர்ஸ்ல எவ்ளோ  பணம் வெச்சுருந்த  அப்டின்னு நீங்க
கேக்கறது புரியுது. முழுசா 200  ரூபா வெச்சுருந்தேன். மாச கடைசி பாஸ்...
200  ரூபா பாத்து செலவு பண்ணுன்னு அப்பா கிட்ட அடிச்சு புடிச்சு வாங்கின பணம். ஸோ வீட்ல சொல்லல. சொல்ல முடியல. திட்டு யாரு வாங்கறது?
அப்படி  இருந்தும் அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டேன்  நேர்மை பாஸ் நேர்மை.

ஏதோ சோதனை காலம். போனது போகட்டும்னு விட்டுட்டேன். திடீர்னு இன்னிக்கு காலைல ஒரு போன் அப்பா கிட்ட இருந்து. மனுஷன் கேக்கறார் பர்ஸ தொலைச்சியான்னு. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி..... ஆமான்னு ஒத்துகிட்டோம்ல..... வேற வழி......

செரி செரி விஷயத்துக்கு வரேன்....
பர்சை எடுத்த அந்த நேர்மை மனிதர் என் போன் நம்பர் இல்லாததால் ஓட்டுனர் உரிமத்தில் உள்ள முகவரிக்கு கடிதம் அனுப்பி அவரது முகவரிக்கு வந்து பொருள்களை வாங்கி செல்ல சொல்லி
.....  எத்தனை பேருக்கு வரும் இந்த மனது. அந்த நல்ல உள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி கோடி........

யாரோ என்னமோ தொலைத்தால் நமக்கென்ன என்று இல்லாமல் தொலைத்தவன் மன நிலையில் இருந்து பார்த்தால்தான் வருத்தம் புரியும்.
நீங்களும் நானும் சிந்திக்கலாமே மனிதநேயத்துடன் !!!!