கார்பரேட் லைப் ன்னு டைட்டில் பாத்ததும் என்னமோ பயங்கர
ஸ்டைலான லைப் பத்தி சொல்ல போறேன்னு நெனைச்சா அது உங்க தப்பு. உங்களுக்கான தலைப்பு இது இல்லை. சரி சரி வந்தது வந்தாச்சு. படிச்சு தான் பாருங்களேன்.
சொல்லப்போனா இந்த கட்டுரை என் சுய அனுபவங்களும் அதன் பாடங்களும்னு கூட சொல்லலாம். எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. ஹி ஹி.
விஷயத்துக்கு வரேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு டைப் பேச்சு தான். கார்பரேட் லைப்க்கு வந்தப்புறம் தான் மனசுல நெனைக்கறது எல்லாம் பேச கூடாது. வேண்டாம்னு சொல்லறத கூட பாலிஷா சொல்லனும்னு கத்துக்கிட்டேன்.
எதிர்ல இருக்கறவன் மனசு வார்த்தையால புண்படாம சொல்ல வந்த கெட்ட செய்திய சொல்லணும். அப்டி இருக்கறவனுக்கு பேர் தான் ப்ரோபஸனல். நம்ம பாஷைல சொல்லனும்னா பொழைக்க தெரிஞ்சவன்.
கார்பரேட் லைப் கற்று கொடுத்த பாடம் தான்........
நட்பு கொடுக்கும் என்று தான் எனக்கு தெரிந்திருந்தது. சில நட்புகள் நம்மை கெடுக்கவும் செய்யும் என்பது 2 வருஷம் முன்னாடி தெரிஞ்சுகிட்டேன். எல்லாம் கார்பரேட் லைப்!!!!!!
விலை கொடுத்து தான் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும். சில திருப்பி தர இயலா விலைகள். அனுபவிச்சா மட்டும் தான் சில வலியும் வேதனைகளும் புரியும்.
மனுஷனா இருக்கற ஒவ்வொருத்தருக்கும் நம்பிக்கை துரோகம் தான் வாழ்க்கைல மன்னிக்க முடியாதது. எனக்கும் நம்பினவர்கள் கொடுத்தது நம்பிக்கை துரோகம் தான். இதெல்லாம் கார்பரேட் லைப்ல சகஜம்.
கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாம பேசறது மட்டுமில்ல.. எனக்கு வலிக்கவே இல்லைன்னு சிரிச்சுக்கிட்டே இருக்கனும் ஆனா கீழ விளுந்தத பத்தி சொல்லவே கூடாது. நாங்கல்லாம் எத்தனை அடிச்சாலும் தாங்குவோம் ரொம்ப நல்லவங்கன்னு நம்ம எதிராளிக்கு புரிய வெக்கணும்.
இதுல ஹைலைட் என்னன்னா அவன் நம்ம எதிரின்னு எந்த சந்தர்ப்ப சூழ்நிலைலயும் காட்டிக்கவே கூடாது. அப்டி காட்டிக்கிட்ட அப்பவே நீங்க ஆட்டத்துல அவ்ட். இந்த ஆணி எல்லாம் என்னால புடுங்க முடியாதுன்னு போயிடலாம்னு நெனச்சேன். ஆனா மனசுல ஒரு வைராக்கியம்.... உனக்கு நான் எந்த வகையிலையும் கொறைஞ்சு போகலை. யாரு என்கூட இல்லாட்டியும் தனியாவே இருக்க முடியும்னு நின்னேன். தனியாவே இருந்துப்பேன்ன்னு நின்னு காமிச்சேன்.
நின்னது போதும் கால் வலிக்கும் உக்காருன்னு சொல்றது புரியுது பாஸ்.
எவன் எப்டின்னு ஜட்ஜ் பண்ணகத்துக்கணும். முக்கியமா
கூட்டத்தில் இருக்கும்போதும் தனியா இருக்கும்போதும் மூஞ்சிய
சிரிச்ச மாதிரியே வெச்சுக்கணும். வீட்ல பொண்டாட்டி கிட்ட கேவலமா திட்டு வாங்கிட்டு வந்தாலும் செரி. ட்ராபிக் போலிஸ்ல பைன் கட்டிட்டு வந்தாலும் சரி. சிரிப்பு மட்டும் அப்டியே இருக்கணும்..
செரி..................... இதனால நா சொல்ல வர கருத்து என்னன்னா
நம்மள பத்தி கெட்டது சொல்றவன் எல்லாம் கெட்டவனும் இல்ல. நம்ம கூடவே இருக்கறவன் எல்லாம் நல்லவனும் இல்ல. சூதானமா இருந்து பொழைச்சுக்க அப்பு..............எப்படியெல்லாம் வாழற மக்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சு இந்த உலகத்துல பொழைக்க கத்துக்கணும் அப்பு.
இப்படியெல்லாம் உங்களுக்கு இருக்க தெரியுமா?
வெல்கம் டு கார்பரேட் லைப். திஸ் இஸ் பார் யு அண்ட் யு ஒன்லி.
1 comment:
அதுல இதையும் சேத்துக்குங்க... அதாவது ஒரு வேலைய ஸ்டாஃப் செய்ய லேட்டாச்சுன்னா அவன் சோம்பேறி.. அதே வேலைய பாஸ் செய்ய லேட்டாச்சுன்னா அவர் பிஸி.. புரிஞ்சுதா...
Post a Comment