Tuesday, May 17, 2011

அரசு அலுவலகம் - எனது பார்வையில்

இன்னிக்கு போஸ்ட் ஆபிஸ் போக வேண்டிய கட்டாயம். Recurring டேபொசிட்ல சேர்ந்த  பணத்தை எடுக்க , எங்க அம்மா என்னையும்  ஒரு அப்பாடக்கர்னு மதிச்சு பார்ம் பில் பண்ண
கூட்டிட்டு போனாங்க.

              அது ஒரு அரத பழைய கட்டடம்.எவ்ளோ தேர்தல் வருது. ஒருத்தருக்கும் சரி பண்ணி தர தோணலை. சரி நம்ம கதைக்கு வருவோம். உள்ள போயி ரொம்ப நேரம் கழிச்சு ஒருத்தர் சிடுமூஞ்சியா வந்தார். தலைவர் மணிரத்னம் படம் பாத்து கெட்டு போனவர் போல. வந்தவுடனே ஒரு போர்ம் எடுத்து நீட்டினார் சாரி சாரி  விட்டு எறிஞ்சார். உங்கள  மாதிரி ஆளுங்கள தான் ஒலிம்பிக்ஸ் தேடிகிட்டு இருக்கு!!!!. நானும் கேட்ச் பிடிச்சேன்ல......

அந்த போர்ம்ல சத்தியமா ஒரு எழுத்து கூட தெரில. ஒருவேளை பிரிண்டர்ல கார்பன் தீந்து போனப்ப எடுத்த கடைசி பேப்பரோ? 

நா உடனே "சார் எப்படி பில் பண்றதுன்னு கேட்டேன்" வந்துச்சு பாரு அவருக்கு அப்டி ஒரு கோவம்.அதுதான் போர்ம், போயி  பில் பண்ணிட்டு வானு அனுப்பிட்டார். போரம் கூட பில் பண்ண தெரியாம நீயெல்லாம்  என்ன படிச்சனு எங்க அம்மா விட்ட கேவலமான லுக்க வார்த்தைல விவரிக்க முடியல.

கஷ்டப்பட்டு ஒருத்தரை அந்த பாழடைஞ்ச வீட்டுக்குள்ள சாரி போஸ்ட் ஆபிஸ்ல  கண்டுபுடிச்சேன். மனுஷன் சும்மா சொல்ல கூடாது கரெக்டா குத்து மதிப்பா பில் பண்ணிட்டார். அப்புறம் அரை மணி நேரம் கொசுவோட போட்டி போட்டு நானும் அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருந்தா

கடைசியா கெடைச்ச பதில். "போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்க"

எனக்கு மட்டுமிந்த பதில் இல்லை. வந்த இன்னோரு வயதான அம்மாவுக்கும் இதே பதில்இதே அலட்சியம்.வாய்ல கெட்ட வார்த்தைய தவிர வேற என்ன வரும். சே!!!! இதெல்லாம் கூட பண்ண முடியாம
 அப்டி ஒரு போஸ்ட் ஆபிஸ் எதுக்குங்கறேன். செய்யற வேலைல ஒரு சின்சியாரிட்டி வேணாமா?அலட்சியம். அலட்சியம்.எவனோ எப்டியோ போகட்டும் நமக்கென்ன அப்டீங்கற மனசு. வயசானவங்க கஷ்டபடுவாங்க அலைய வெக்க கூடாதுன்னு கூட தோணாத அவனெல்லாம் 
என்ன மனுஷன். அட   வாங்கற சம்பளத்துக்காகவாச்சும் வேலை செய்யலாமே.

நானும் தான் வேலை செய்யறேன். TAT, METRICS, OBJECTIVE bla bla bla............ ஒரு தப்பு பண்ண முடியுமா பாரின் கம்பெனிகாரன்கிட்ட?. ஆப்பு அப்ரைசல் அப்டீங்கற பேருல வந்துடுமே.

இந்த அலட்சியதுக்கிட்ட இருந்து நடுத்தர வர்க்க மனிதர்களை  எப்டி காப்பாத்தறது?





























3 comments:

அண்ணாமலையான் said...

கோயம்புத்தூர் சிட்டிலயா இப்டி ஒரு போஸ்ட் ஆஃபீஸ் இருக்கு? நீங்க ஏன் போஸ்ட் ஆஃபீஸ் செலக்ட் செஞ்சீங்கன்னு தெரியலியே.. பேங்க் கொஞ்சம் பெட்டரா இருக்கும். தனியார்னா.. அதுவும் நல்லா விசாரிச்சி சேர்ந்தா.. மத்தபடி இந்த அலுவலகம் அதோட ஊழியர்கள் இதெல்லாம் இந்தியாவோட நிரந்தர அடையாளங்கள்...

வில்லனின் விநோதங்கள் said...

பாதுகாப்புதுறை போலிஸ் துறையை தவிர அனைத்தையும் தனியார்மயமாக்குவதுதான் நல்ல வழி

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஆதங்கம் புரிகிறது . இது சொல்லித் திருத்த இயலாத ஒன்று சுயமாக திருந்தினால் மட்டுமே நிலைத்து நிற்கும்