Tuesday, November 25, 2008

அனுமதி கொடு

அனுமதி கொடு
உனக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகிறேன்...
தாயின் மடிக்கு அடுத்ததாய்
நான் அன்பை உணர்ந்த தருணம்
உன் கண்கள் எனக்கு காட்டியது
காதலும் அம்மாவை போலதான் என்று...
உன் பார்வையில் நான் கண்டேன்.

என் வாழ்க்கையின் முழுமைக்குமான நேசத்தின்
நேசிப்பு இன்னும் மீதம் இருக்கிறது.
நேசம் சுமந்த உன் விழிகளில்
அனுமதி கொடு
உனக்காய் ஒரு வாழ்க்கை

வாழ்ந்துவிட்டு போகிறேன்!!!!!!!!!!!!!!!!

மழை சாரலும் தூறலும்

மழை சாரலும் தூறலும்
உன்னை எனக்கு
நியாபக படுத்தி கொண்டே இருக்கின்றன...
உன் காதலுக்காக அல்ல
நீ என்னை

விலக்கிய தருணங்களுக்காக!!!!!!!!!!!!!!!!!!!
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே!!!!!!!!
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே !!!!!!!!!!!!!

MY FAVORITE LINES


Monday, November 24, 2008

வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன

சில வார்த்தைகள் தான் நம்
வாழ்க்கையையே
தீர்மானிக்கின்றன
ஆம்!!!!!
இதில் எனக்கு உடன்பாடு தான்
உன் ஒற்றை வார்த்தையில்
என் வாழ்கையை தீர்மானித்து
விட்டேன்
உன்னோடு தானென்று !!!!!!!



வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்
ரொம்ப அழகான படம்.... சூர்யா அவ்ளோ ஸ்மார்ட் ..........சமீரா அழகிய கவிதை.....சிம்ரன் வாசித்துவிட்ட கவிதை
லாஜிக் எல்லாம படத்தை படமா மட்டும் பாருங்க .. உங்களுக்கும் புடிக்கும் சூர்யா சமீராவிடம் காதலை சொல்லும் இடம், சூழ்நிலை, ரயில் அழகான பாடல் வாழ்த்துக்கள் கெளதம்

Sunday, November 23, 2008

காட்டுப்பூ





வீட்டு செடியாய்
பூந்தோட்டியில் இருப்பதை விட
காட்டு பூவாக இருப்பதில்
என் விடுதலையை
உணர்கிறேன்

என் வழியெங்கும்
உன் நியாபக சாரல்கள்
பயணத்தை
முடித்துவிட
விருப்பமில்லை
எனக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, November 21, 2008

உனக்கான என் காதல்


இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது

உனக்கான என் சொல்லப்படாத காதல்

எழுதப்படாத கவிதையாய்

வரையாத ஓவியமாய்

எழுதி முடித்து விட விருப்பமில்லை எனக்கு!!!!!!!!!!!!