Monday, May 21, 2012

நட்பு நட்பு

                            நம்ம வாழ்க்கைல கடந்துபோற எல்லாரும் நம்மள இம்ப்ரெஸ் பண்றது இல்லை. 'அட' அப்டின்னு அசின் போனா மட்டும் திரும்பி பாக்கற மக்களுக்கு I am sorry  இந்த பதிவு பொருந்தாது. 

நான்  எல்லாரையும் கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிக்கறேன்னு நானே என்னை பத்தி பெருமையா நெனைச்சு பாத்துகிட்டு இருந்த என் நெனைப்புல மண்ணு கல்லு எல்லாத்தயும் போட்ட ஒரு மனுஷன்.  

   நமக்கே தெரியாம அல்லது தெரிஞ்சு பண்ற தப்புகளை அடுத்தவங்க சொன்னா புடிக்காது. ஏன் நண்பர்கள் சொன்னாலே கோவம் வரும். என் தப்புகளை சுட்டி காட்டியே ஆன நண்பர் இவர். சொல்ல போனா கூட பிறக்காத உடன்பிறப்பு. 

                   தப்பை சுட்டி காட்டவே ஒரு தைரியம் வேணும்... அது இவர் கிட்ட ரொம்ப ஜாஸ்தி. ரொம்ப கோவம் + ரொம்ப திமிர் கொழுப்பு... இப்டி தான் முதல் பாக்கறப்ப பேசினப்ப தோணிச்சு... அதுக்கப்புறம் சண்டை ஈகோ இப்டி தான் இவர் அறிமுகம். 
  
    சிலர் என்ன திட்டினாலும் நம்ம நல்லதுக்குனு தோணும் பட் ஒரு சிலரின் முக குறிப்புகளே நமக்கு கடுப்பாகும். இவர் இதுல முதல் பிளேஸ். நம்ம லைப் ல ஒரு சிலரை மட்டும் தான் ரோல் மாடல் மாதிரி  யோசிக்க தோணும். என்னோட தவறுகளை ரொம்ப அழகா சுட்டி காட்டி.. சொள்ளபோனா சில சமயம் செருப்பால அடிச்சா மாதிரி காட்ட தெரிந்த ஒரு  நல்ல மனிதர். கொஞ்சம் நிறைய straight forward... கொஞ்சம் innocent. 

நீங்க பண்ணின பெஸ்ட் அட்வைஸ்... இப்பவும் நா நியாபகத்துல  வெச்சுருக்கேன். "உன்னால எந்த விஷயத்த யார்கிட்டயும் வெளிப்படையா சொல்ல முடியாதோ
அந்த விஷயத்த செய்யாதே - அப்படி சொல்ல முடியாத விஷயங்கள்  அநேகமா  தப்பான விஷயங்களாக தான் இருக்கும் ". இப்பவும் நா பெரிய விஷயங்களை முடிவு செய்யறப்ப I always consider this Advise.
உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அடுத்த பெரிய பாடம் "Self discipline". 

Plus point a சொன்னா எப்புடி. உங்களுக்கும் மைனஸ் Points இருக்குங்க பாஸ்.
உங்களோட பெரிய மைனஸ் பாயிண்ட் அப்டின்னு நா நெனைக்கறது  "கொஞ்சம் think in other's point of view" and "Try to use polite words while expressing your point of views to others "

உங்கள பத்தி எழுதறதுக்கு நெறையா இருக்கறதுனால, பார்ட் 2 ல இன்னும் சொல்லறேன்.
தேங்க்ஸ் பார் being my Brother, Philosopher and a Nice friend. Good Luck Durai.



No comments: