Monday, July 9, 2012

என்ன இல்லை எம் தமிழில்?

                                                    

                                        நாலடியார் கூறும் கல்வி 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

விளக்கம் :-

குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல;

நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.


குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு"1 எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.

நன்றி : http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm

No comments: