Thursday, July 19, 2012
பெரியபுராணம்
“வான் முகில் வழாது பெய்க
Monday, July 16, 2012
நான் ரசிக்கும் கானங்கள் 4
தன்னை அறிதலே தெளிந்த அறிவு என்றும் மெய்ஞானம் என்றும் நம் தமிழ் இலக்கியங்கள் கூறியதை இவ்ளோ எளிமை தமிழில் என்னை போல் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எழுதியது தான் கவிஞரின் வெற்றி.
எப்போ கேட்டாலும் எனக்கு பிடித்த வரிகள் "
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும்".. இந்த வரிகள் பாடும் போதெல்லாம் ராஜராஜ சோழன் படத்துல சிவாஜி சபையில் ஒரு மிடுக்கோடு நடந்து வரும் காட்சி என் மனத்திரையில் வந்து போகும்.. அது ஏன்னு புரியலையே !!!!உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
(உன்னை)
பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
Thursday, July 12, 2012
நான் ரசிக்கும் கானங்கள் 3
எப்போ கேட்டாலும் நெகிழ வைக்கும் பாடல். பத்மினியும் நதியாவும் பாட்டி பேத்தியா வாழ்ந்திருப்பார்கள்.
Just addicted to this song
பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா ஆஆ .
பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் ,
கண்களும்ம் ஓய்தது ஜீவனும்ம் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
……
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்கிறேன் அதில் என் முகம் பார்கிறேன்
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் ..
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வாஆஆ
பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
Wednesday, July 11, 2012
நான் ரசிக்கும் கானங்கள் 2
கடவுள் வழிபாடு என்றாலே எனக்கு தெரிஞ்சதேல்லாம் "சாமி எனக்கு இது வேணும் அது வேணும் இது கஷ்டம் அது சங்கடம் இதெல்லாம் நீ சரி பண்ணிடு " இப்டி தான் சாமி கும்பிட்டு பழக்கம்.
சாமி நி இருக்கறப்ப எனக்கு எந்த குறையுமே இல்லைன்னு கடவுள் கிட்டயே சொல்லற அழகு தான் இந்த பாட்டோட சிறப்பு. இந்த பாடல் கேட்ட பிறகு தான் நானும் என் பிரார்த்தனை முறைகளை மாற்ற கற்றுக்கொண்டேன் .
M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல், கர்னாடிக் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமில்ல புரியாதவர்களையும் ஈர்த்தது இப்பாடலின் மற்றொரு தனி சிறப்பு.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சாமி நி இருக்கறப்ப எனக்கு எந்த குறையுமே இல்லைன்னு கடவுள் கிட்டயே சொல்லற அழகு தான் இந்த பாட்டோட சிறப்பு. இந்த பாடல் கேட்ட பிறகு தான் நானும் என் பிரார்த்தனை முறைகளை மாற்ற கற்றுக்கொண்டேன் .
M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல், கர்னாடிக் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமில்ல புரியாதவர்களையும் ஈர்த்தது இப்பாடலின் மற்றொரு தனி சிறப்பு.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா.... மலையப்பா....
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
பாடல் : C. ராஜகோபாலாச்சாரி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி
Monday, July 9, 2012
என்ன இல்லை எம் தமிழில்?
நாலடியார் கூறும் கல்வி
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
விளக்கம் :-
குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல;
நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.
குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு"1 எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.
நன்றி : http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm
Subscribe to:
Posts (Atom)