தன்னை அறிதலே தெளிந்த அறிவு என்றும் மெய்ஞானம் என்றும் நம் தமிழ் இலக்கியங்கள் கூறியதை இவ்ளோ எளிமை தமிழில் என்னை போல் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எழுதியது தான் கவிஞரின் வெற்றி.
எப்போ கேட்டாலும் எனக்கு பிடித்த வரிகள் "
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும்".. இந்த வரிகள் பாடும் போதெல்லாம் ராஜராஜ சோழன் படத்துல சிவாஜி சபையில் ஒரு மிடுக்கோடு நடந்து வரும் காட்சி என் மனத்திரையில் வந்து போகும்.. அது ஏன்னு புரியலையே !!!!உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
(உன்னை)
பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
No comments:
Post a Comment