“வான் முகில் வழாது
பெய்க
மலிவளம் சுரக்க மன்னர்
கோன்முறை
அரசு செய்க
குறைவிலாதுயிர்கள்
வாழ்க
வான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம்
வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக
உலக மெல்லாம்”
மன்னன் செங்கோல் முறைஅரசு செய்ய வேண்டும், நெறி தவறாது பக்கசார்பற்று எல்லா
மக்களையும் சரிசமமாக ஆட்சி செய்ய வேண்டும். எந்தக்குறையும் இல்லாமல் மக்கள் வாழ
வேண்டும். இதற்கு மாதம் மும்மாரி பொழிய வேண்டும். நான்கு மறை நால் வேதமும் கூறும்
நெறிமுறை தவறாது ஒழுக வேண்டும்.
நற்தவம் தேவர்களுக்கான வேள்விகள் ஒழுங்கு தவறாது
சரியன முறையில் செய்ய வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகெல்லாம் நிலவவேண்டும். நீதி
தவராது எல்லோரும் ஒழுகுதல் வேண்டும்.
இப்படியான நிலை நாட்டில் இருந்தால் அமைதியும்
சுபீட்சமும் மக்களின் வாழ்வும் உயர்வு பெற்று நாடும் உயர்ந்து உய்வு பெறும் என்பது
தின்னம்
No comments:
Post a Comment