கடவுள் வழிபாடு என்றாலே எனக்கு தெரிஞ்சதேல்லாம் "சாமி எனக்கு இது வேணும் அது வேணும் இது கஷ்டம் அது சங்கடம் இதெல்லாம் நீ சரி பண்ணிடு " இப்டி தான் சாமி கும்பிட்டு பழக்கம்.
சாமி நி இருக்கறப்ப எனக்கு எந்த குறையுமே இல்லைன்னு கடவுள் கிட்டயே சொல்லற அழகு தான் இந்த பாட்டோட சிறப்பு. இந்த பாடல் கேட்ட பிறகு தான் நானும் என் பிரார்த்தனை முறைகளை மாற்ற கற்றுக்கொண்டேன் .
M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல், கர்னாடிக் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமில்ல புரியாதவர்களையும் ஈர்த்தது இப்பாடலின் மற்றொரு தனி சிறப்பு.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா.... மலையப்பா....
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
பாடல் : C. ராஜகோபாலாச்சாரி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி
2 comments:
எனக்கு மிக பிடித்த பாட்டு. பலரையும் கவர்ந்த பாட்டு என நினைக்கிறேன்
Thanks for the comments, please let me know if any improvements in my blog.
Post a Comment